மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 18 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஜூலை.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகம்: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்.
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023

பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை விவரங்கள்
விஞ்ஞானி - 18
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊதிய நிலை 11 ன் படி துவக்க ஊதியமாக, மாதத்துக்கு ரூ.67,700 பெறுவர். இதர சலுகைகள் உள்பட சேர்த்து ரூ.1.07,339 பெறுவர்.
கல்வி தகுதி
விஞ்ஞானி பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து வேதியயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வு இதழ்கள் எழுதியிருக்க வேண்டும். இயற்பியல், கெமிக்கல் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் எம்.டெக்., படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விஞ்ஞானி பதவிக்கு, ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் யார், யார் என்பதை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை
https://scitarecruit.cecri.res.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதள பக்கத்தில் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைன் வாயிலாகவே, விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டும்.
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம் உள்ளிட்ட இதர முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!
காலிப் பணியிடங்கள், பொது நிபந்தனைகள் குறித்த விவரம் அறிய...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
By Shivani Shree Careerindia
No comments:
Post a Comment