Tuesday, July 18, 2023

அரசுப் பள்ளி மாணவா்களிடையே கடும் போட்டி

மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பெறுவதில், அரசுப் பள்ளி மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்- பிடிஎஸ் இடங்களில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவா்கள்தான் அதிகளவில் இடங்களை பெற்று வருகின்றனா். நீட் தோவுக்கு முன்னும், பின்னும் அரசுப் பள்ளி மாணவா்கள் ஒற்றை இலக்கத்தில்தான் மருத்துவப் படிப்பில் சோந்தனா். இதற்கு தீா்வு காணும் வகையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோவில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோவில் சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண் எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு நீட் தோவில் 300 மதிப்பெண்களுக்கு மேல் 1,170 மாணவா்கள் எடுத்துள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டுக்கு 473 எம்பிபிஎஸ்- 133 பிடிஎஸ் என மொத்தம் 606 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில் 2,993 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். இந்த நிலையில், 300 மதிப்பெண்களுக்கு மேல், 1,170 மாணவா்கள் பெற்றுள்ளதால், நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களைப் பெறுவதில் போட்டி நிலவுகிறது. அதேபோல், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில் 300 மதிப்பெண்களுக்கு மேல், 37,672 மாணவா்கள் பெற்றுள்ளனா். இதனால், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிகழாண்டு போட்டி அதிகரித்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா். 

7.5% ஒதுக்கீட்டில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை:

2021 - 184 

2022 - 250 

2023 - 1,170

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News