Thursday, July 6, 2023

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை: பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு.


உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு(நெட்) மாநில தகுதித் தேர்வான(செட்), மாநில அளவிலான தகுதித் தேர்வு(ஸ்லெட்) போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிப் பேராசியர் பணிக்கான நேரடி நியமனத்திற்கு பி.எச்.டி.,(முனைவர் பட்டம்) தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. எனவே, நெட், செட், ஸ்லெட் (NET/SET/SLET) ஆகியவற்றில் ஏதாவதொரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News