சென்னை அடையாறு மண்டலத்திற்குட்பட்ட திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின், அங்கு மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயினைப் பார்வையிட்டு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர்,மாணவர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கையாளுவது குறித்தும், “நமது குப்பை, நமது பொறுப்பு" என்று விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment