Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 19, 2023

தூக்கமின்மை படபடப்பு மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி சரியாக!! இதை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும்!!


தூக்கமின்மை மனக்குழப்பம் அமைதியின்மை மன அழுத்தம் படபடப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை மூன்றே நாளில் குணப்படுத்தக்கூடிய ஒரு எளிய வீட்டு வைத்தியத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இப்போது இருக்கின்ற நிலையில் வேலை பளு பொருளாதார நெருக்கடி குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நமக்கு படபடப்பு மன அழுத்தம் மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு இதனால் சரியாக தூங்காமல் நரம்பு பாதிப்புகள் அதிகப்படியான கோபம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்காக மாத்திரை மருந்துகள் என்று மருத்துவமனைக்கு சென்றால் அதுவே எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். முதலில் நமக்கு நோய் ஏற்படும் போது ஏதேனும் மூலிகையையோ அல்லது ஆயுர்வேத மருந்தையோ பயன்படுத்தி குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு ஆங்கில மருந்துகளுக்குமே நிச்சயமாக பக்கவிளைவுகள் இருக்கிறது.

இந்த ஆங்கில மருந்துகளை தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தி வரும்போது அதுவே நம் உடம்பில் தீராத வியாதிகளை உருவாக்கி விடுகிறது. உதாரணமாக சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்பு போன்ற பெரிய வியாதிகளை உண்டாக்குகிறது. எனவே தூக்கமின்மை மன அழுத்தம் படபடப்பு போன்ற நோய்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எவ்வாறு குணமாக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துளசி இலை
மிளகு
சின்ன சீரகம்

பொருட்களின் பயன்கள்:

மூலிகைகளுக்கெல்லாம் அரசன் என்றே கூறப்படுவது தான் துளசி. இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாதுக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த சத்துக்கள் மனக்குழப்பத்தை நீக்கி படபடப்பை தடுத்து மனதை சாந்தப்படுத்துகிறது. மிளகு கெட்ட கொழுப்புகளை அழிக்கக் கூடியது. இதில் உள்ள சின்ன சீரகம் ஆனது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கூடியது. மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க கூடிய சக்தி இந்த சின்ன சீரகத்திற்கு உள்ளது.

செய்முறை:

துளசி இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஐந்து அல்லது ஆறு மிளகையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி சின்ன சீரகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த மூன்று பொருட்களையும் வைத்து இப்போது கஷாயம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளவும். இது ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும் பிறகு இதனுடன் எடுத்து வைத்துள்ள மிளகையும் சின்ன சீரகத்தையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இந்த கசாயம் நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.

இந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இவ்வாறு இந்த கசாயத்தை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர நமக்கு ஏற்பட்டுள்ள மன குழப்பம், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, டென்ஷன், ரத்தக்கொதிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் என அனைத்தும் சரியாகி மனம் நிம்மதியாக சாந்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment