தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் உள்ளிட்டோரை, பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம்; அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறக்கூடாது என்றும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment