சென்னை ஐஐடி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்கிறது. இந்தப் படிப்பில், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளின் முன்னேற்றங்கள் கற்றுத் தரப்பட உள்ளன.
இதற்காக, கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது, திட்டப் பணிகளை சரியான நேரத்தில், குறைந்த செலவில், உயர்ந்த தரத்தில் முடிக்கத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடி மூத்த பேராசிரியர் குழுவினர் இவற்றை மாணவர்களுக்கு கற்றுத் தரவுள்ளனர். 126 மணி நேர இணையவழி வகுப்புகள், ஆசிரியர்கள், நிபுணர்களுடன் 42 மணி நேர இணையவழி கலந்துரையாடல் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. வரும் செப். 1-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் https://code.iitm.ac.in/construction-technology-and-management என்ற இணையதளத்தில் ஆக. 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 - 12TH STD QUARTERLY EXAM QUESTION PAPERS
IMPORTANT LINKS
Friday, July 14, 2023
கட்டுமான தொழில்நுட்பம் குறித்த படிப்பு அறிமுகம்
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment