Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 24, 2023

ரயில் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை: செப்-4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை நிறுவனத்தில் (ரைட்ஸ்), 16 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. 

தகுதி: ஏதாவதொரு துறையில் பொதுப்பிரிவினர் 50 சதவிகிதம், மற்ற பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளிந்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://rites.com என்ற இணையதளத்தின் மூலம் செப்-4 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள்: தில்லி கொல்கத்தா, மும்பை, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://rites.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment