வேலைக்கு செல்லும் பலரும், தொடர்ச்சியான வேலைப்பளு காரணமாக அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். இது போன்ற சூழலில், மனதையும், உடலையும் ஆசுவாசப்படுத்தி கொள்ள வாக்கிங் செல்வது அவசியம்.
மாலையில் வாக்கிங் செல்வதால், ரிலாக்ஸாக உணர்வதோடு, மன அமைதியும் மேம்படும். மாலையில் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் அறிந்து கொள்வோம்.1. ரிலாக்ஸாக உணர்வீர் :பரப்பான வாழ்க்கைச்சூழலில், மாலையில் வாக்கிங் செல்வதால் மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள். அன்றாடம் பயன்படுத்தாத தசைகளுக்கு அசைவு கொடுப்பதால், உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும்.2. தூக்கம் மேம்படும் : மாலையில் வாக்கிங் செல்வோருக்கு, நிதானமாக இருப்பதால், மன அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் குறைவதால், இரவினில் தூங்கும் போது நன்றாக உணர்வீர்கள். 3. உயர் ரத்தஅழுத்தம் குறையும் : மாலையில் வாக்கிங் செல்வதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.4. தசை வலுப்படும் : மாலை வாக்கிங் செல்வோருக்கு, தசைகள் தானாக வலுப்பெறும்.
மேலும், தசைகள் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும்.5.மன அழுத்தத்தை குறைக்கும் : மாலையில் வாக்கிங் செல்வது, மன அமைதி மேம்பட உதவும். மேலும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. 6. எடை குறைக்க உதவும் : மாலை நேரத்தில் நீண்ட தொலைவு , தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலம் வாக்கிங் செல்வோருக்கு கணிசமாக உடல் எடை குறையும்.
மேலும் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.7. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : மனித உடலில் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில், நோயெதிர்ப்பு மண்டலம் முக்கிய பங்காற்றி வருகிறது. மாலை நேரத்தில் வாக்கிங் செல்வோருக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. 8. உடற்பயிற்சி உதவும் : உடற்பயிற்சி என்பது எப்போதும் அதிக எடையை தூக்குவதோடு சம்பந்தப்பட்டதல்ல. மாலையில் எளிமையாக வாக்கிங் செல்வதும் நல்ல உடற்பயிற்சியாகும்
No comments:
Post a Comment