Tuesday, August 29, 2023

நல்லாசிரியர் விருதுக்கு குவியும் சிபாரிசுகள்

நல்லாசிரியர் விருதுக்கு அமைச்சர்களின் சிபாரிசு பட்டியல் குவிவதால், தகுதியானவர்களை தேர்வு செய்ய முடியாமல், பள்ளிக் கல்வித் துறை திணறி வருகிறது.

இந்த ஆண்டு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள், இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. அதில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் இடம் பெற்றனர்.

தமிழக அரசின் சார்பில், 390 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியானவர் பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்களில், சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளை, பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு அமைச்சர்களின் பெயரில், நல்லாசிரியர் விருதுக்கு சிபாரிசு கடிதங்கள் குவிந்து வருகின்றன.

பள்ளிக் கல்வி செயலகம் மற்றும் அமைச்சகத்துக்கு வரும் இந்த கடிதங்களை, என்ன செய்வது என்று தெரியாமல், அமைச்சக அதிகாரிகளும், செயலர் அலுவலக அதிகாரிகளும் தவித்து வருகின்றனர்.

கற்பித்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, விருதுகளை வழங்க வேண்டும் என்றும், ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசுகளை ஓரங்கட்டி விட்டு, உண்மையில் தகுதியான ஆசிரியர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News