Sunday, August 27, 2023

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இருவர் தேர்வு.

தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் நல்லாசிரியர் விருது.

டெல்லி விஞ்ஞான் பவனில் செப்.5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News