சேலம் மாவட்ட தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:
2012 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் 12200 பகுதி ஆசிரியர்கள் தற்பொழுது பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வீதம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சி அமைத்தால், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் அறிக்கை எண் 181ல் கூறியிருந்தது.
இது தொடர்பாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் பலகட்ட முயற்சிகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத் தலைவர்களை அழைத்து பேசினார். அவர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தார். அவரின் சீரிய முயற்சியால் நிதி அமைச்சரையும் சந்திக்க வைத்தார். பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும், இந்த தகவலை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கல்வி அமைச்சர் உறுதி அளித்தார். இதை நினைவூட்டும் வண்ணம் இன்று சேலத்தில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சொன்னதை செய்யும் திமுக அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கூடிய விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்ற நம்பிக்கையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டுள்ளது. 13 கல்வி ஆண்டுகளாக பணி பாதுகாப்பின்றி வாடும் பகுதி நேர ஆசிரியர்களை மேலும் தாமதப்படுத்தாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தாமதமாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை DPI வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் (நிச்சயம் எங்களுக்காக விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
IMPORTANT LINKS
Tuesday, August 29, 2023
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment