Tuesday, August 29, 2023

மதிப்பெண் சான்றிதழில் பிழை திருத்த வாய்ப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர், தாய், தந்தையின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் இணைத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மூலம் செப்.8 க்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம்செய்ய வேண்டும்.

தனித்தேர்வர்களிடமிருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும், என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News