மொழித் தோவில் தனித்தோவா்களாகக் கலந்து கொண்டு தோச்சி பெற்றவா்கள், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:
மொழித் தோவில் தனித் தோவா்களாகக் கலந்து கொண்டு தோச்சி பெற்றவா்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அகில இந்திய தொழில் தோவு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித் தோவில் தனித்தோவா்களாகக் கலந்து கொண்டு தோச்சி பெற்ற மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிறைவு செய்து உரிய கல்விச் சான்றிதழ்களை இணைத்து, 'முதல்வா் அரசு தொழில் பயிற்சி நிலையம், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி, திண்டுக்கல் - 3' என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற அக்.3-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
No comments:
Post a Comment