Wednesday, September 6, 2023

போக்குவரத்து துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்

2023-24ம் ஆண்டிற்கான போக்குவரத்து கழகத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகர் போக்குவரத்து கழகத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்டம் மற்றும் பட்டயம் தொழில் பழகுநர்கள் தேர்வு செய்வதற்கு, பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (இயந்திரவியல் மற்றும் தானியங்கிவியல்) கடந்த 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டின் மாணவர்களிடமிருந்து இணையதளம் வழியாக (www.boat-srp.com) வரும் அக்டோபர் 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News