Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 12, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.2023




ஜெசி ஓவன்ஸ்



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

விளக்கம்:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.



பழமொழி :

Constant dripping wears away the stone

எறும்பு ஊர கல்லும் தேயும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி :

எவ்வளவு
அலட்சியப்படுத்தப்பட்டாலும்
அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும்
எடுத்த காரியத்தை முடித்தே தீருவது
என்ற திடமான கொள்கையும்
விடாமுயற்சியும் இருந்தால்
வெற்றி கிடைத்தே தீரும். அறிஞர் அண்ணா

பொது அறிவு :

1. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

2. "பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

விடை: லாலா லஜபதிராய்


English words & meanings :

retina - விழித்திரை spryest - சுறுசுறுப்பான

ஆரோக்ய வாழ்வு :

எள்: இந்த விதைகளில் இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை தைராய்டு ஹார்மோன்களை உருவாக்கி தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

செப்டம்பர் 12

ஜெசி ஓவென்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் பாலு என்ற ஒரு பையன் இருந்தான். ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும்போது வழியில் நாயுடு அவர்களுடைய தோட்டத்தில் இருந்த கீரை செடிகளை பார்க்கிறான்.

பாலுக்கு பாலக்கீரை என்றால் ரொம்ப பிடிக்கும். அதில் கொஞ்சம் கீரைகளை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு சென்றான். வீட்டுக்கு போனதும் தன் அம்மாவிடம் போய் “அம்மா அம்மா நான் கொஞ்சம் கீரைகளைக் கொண்டு வந்திருக்கேன். இதை வைத்து சுவையான சாப்பாடு செய்து தரீங்களா!” என்று கேட்டான் பாலு. அவன் அம்மா கேட்டாங்க “எங்கிருந்து இந்த கீரைகளை கொண்டு வந்த” அதற்கு பாலு “நான் இதை நாயுடு அவர்கள் தோட்டத்தில் இருந்து கொண்டு வந்தேன்” அப்படின்னு அப்பாவியா சொன்னாலும் உண்மையில் பாலு கீரைகளைக் திருடிட்டு தான் வந்தான். ஆனா! அவன் அம்மா நினைத்தாங்க பாலு இன்னும் சின்ன பையன் தெரியாம கீரைகளை பறித்து வந்திருப்பான் என்று அவனை எதுவும் சொல்லவில்லை.அவன் அம்மா அவனுக்கு அந்த கீரைகளை வைத்து அன்று இரவு சுவையான சாப்பாடு செய்து கொடுத்தாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம், முன்னாடி வந்தது போல ஒரு மரத்திலிருந்து மாங்காயை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து அவன் அம்மாவை மாங்காய் பருப்பு செய்ய சொன்னான். முன்னாடி போலவே அவன் அம்மா அவனை திட்டவில்லை. பாலு ரொம்ப குறும்பா ஆகிட்டான் என்று நினைத்து அவனுக்கு சுவையான சாப்பாடு செய்து கொடுத்தாங்க. அவன் அதை சந்தோஷமாக சாப்பிட்டான். ஒரு நாள் முன்னாடி ஏற்கனவே செய்ததைப் போல பாலு பழங்களை பறிக்கும்போது தோட்டக்காரர் அவனை கையும், களவுமாக பிடித்தார். அவனை அவன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் அவங்க அம்மாகிட்ட அவன் திருட்டை பற்றி சொன்னார்.

பாலு அம்மாவுக்கு ரொம்ப கோபம் வந்தது. “என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். வேறு யாரோ திருடினதற்காக இவன் மேல பழியை போடாதீங்க” என்று சொல்லி தோட்டக்காரனை அனுப்பிட்டாங்க. அவன் அம்மா அவனை கண்டிக்காமல் இருந்ததனால் அவனால் அவன் தப்பை உணர முடியவில்லை. இந்த மாதிரி சம்பவங்கள் நடந்த போது தான் அம்மா அவனுடைய குணத்தை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று நினைத்தான் பாலு.

சில வருஷங்களுக்கு அப்புறம் பாலு பெரியவன் ஆனான். வயது ஆக ஆக நம்முடைய தேவைகளும் மாறும். அவன் சின்ன வயசுல பழங்களையும், காய்கறிகளையும் திருடினான். ஆனால் இப்போது அவன் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி பணம், அடுத்தவர்களின் பொருட்கள் என திருட ஆரம்பிச்சான்.

அவன் அம்மா நினைத்தாங்க பாலு பெரிய பையன் ஆயிட்டான் அவன் என் பேச்சை கேட்க மாட்டான் என்று நினைத்து அவனை அப்பவும் அவங்க கண்டிக்கவில்லை. ஒரு முறை அவன் திருடும் போது அவனை போலீஸ் கையும், களவுமாக பிடிச்சிட்டாங்க.

போலீஸ் அவனை பிடிச்சிட்டு போகும்போது அவன் அம்மாவுக்கு உண்மை தெரிந்து அழ ஆரம்பிச்சாங்க. அப்போது பாலு அவன் அம்மா கிட்ட சொன்னான் “இப்ப அழுது என்ன பிரயோஜனம் அம்மா நீங்க நான் முதல் தடவை நாயுடு தோட்டத்தில் இருந்து திருடிய போது என்ன தடுத்திருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன்” என்று சொன்னான். போலிஸ் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க, கருத்து: இந்த கதையோட நீதி என்னவென்றால் எப்போதெல்லாம் குழந்தைகள் தப்பு பண்றாங்களோ! அப்போதெல்லாம் அவர்கள் செய்தது தவறு என்று உணர வைக்க வேண்டியது, அவங்க அம்மா அப்பாவோட பொறுப்பு. இல்லனா குழந்தைகள் வளரும் போது அந்த தப்புகள் பழக்கமாக மாறி அவங்களை தப்பான வழியில் கொண்டு போகும்.


இன்றைய செய்திகள்

12.09.2023

*புதுவகை கொரோனா தொற்று: தடுப்பூசியை வேகப்படுத்த பிரிட்டன் அரசு மும்முரம்.

*இந்த ஆண்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை - சுற்றுச்சூழல் மந்திரி தகவல்.

*தவில் இசையால் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்த சிவகங்கை வித்வான்- சர்வதேச நாடுகளை கவர்ந்ததாக பெருமிதம்.

*தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

*பும்ராவின் குழந்தைக்கு பரிசு வழங்கிய பாகிஸ்தான் வீரர் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.

*பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன் - ஓய்வு குறித்து மனம் திறந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.

Today's Headlines

* New type of corona infection: British government is trying to speed up the vaccine.

*Burning of firecrackers is prohibited on Diwali this year too - Environment Minister informs.

* Sivagangai Vidwan who attracted the attention of world leaders with Davil music - feeling proud to attract international countries.

* Mani Mandapam with Statue of Martyr Immanuel Sekaranar: Chief Minister M.K. Stalin.

*Pakistani cricketer give gift to Bumrah's child - this heart touching video goes viral


*I've asked myself many times - tennis player Djokovic is open about retirement.

Prepared by : Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment