Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

நிலவின் தென் துருவத்தில் கந்தகம் இருப்பதை சந்திரயான் 3ன் ரோவர் மீண்டும் உறுதி செய்துள்ளது: இஸ்ரோ தகவல்

நிலவின் தென் துருவத்தில் கந்தகம் இருப்பது மற்றொரு தொழில்நுட்பம் மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் அதன் தென் துருவத்தில் மிகச்சரியாக தரையிறங்கிய நிலையில், பிரக்யான் ரோவர் லேண்டரிலிருந்து வெளியே வந்து நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் தற்போது நிலவின் தென் துருவத்தில் கந்தகம் இருப்பதை ரோவரில் உள்ள கருவி உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ரோவர் கந்தகம் இருப்பதை கண்டறிந்த நிலையில் ரோவரில் இருந்து மற்றொரு கருவியில் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது.

மற்றொரு கருவியில் நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் நிலவில் கந்தகம் இருப்பதை உறுதிபடுத்தியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏபிஎக்ஸ்எஸ் என்ற கருவி நடத்திய பரிசோதனையில் கந்தகம் இருப்பதுடன் மேலும் சில தனிமங்கள் சிறிய அளவில் இருப்பது உறுதியானது. கந்தகம் எப்படி நிலவில் படிந்துள்ளது என்பதை கண்டறிய ஆய்வு நடைபெற்று வருகிறது.

இயற்கையாகவே கந்தகம் படிந்துள்ளதா அல்லது எரிமலை வெடிப்பால் படிந்ததா என்று இஸ்ரோ ஆய்வு நடத்தி வருகிறது. விண்கல் விழுந்து கந்தகம் நிலவில் படிந்துள்ளதா என்று இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது. நிலவில் கந்தகம் இருப்பது தொடர்பான புதிய வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் கந்தகம் குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment