Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 14, 2023

எல்எல்எம் சட்ட படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்



சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment