Sunday, September 10, 2023

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம். பொதுமக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஆகிவிடும் என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அரசு கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது. இதனை செய்யாத நுகர்வோரின் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த ரேஷன் பொருள்களை பெற முடியாது எனவும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News