நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளுக்கும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒது க்கீடு இடங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் நீ முதுநிலை கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உறைவிட மருத்துவர் சங்கம் கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் MD, MS படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2 சுற்றுகள் முடிந்த நிலையில், 3வது சுற்று கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கட்-ஆப் மதிப்பெண் ஜீரோவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3வது சுற்றுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment