Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து அரசு பள்ளிகளிலும், முன்னாள் மாணவர்களை தேடி கண்டுபிடித்து, பள்ளி மேம்பாட்டு பணியில் இணைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு, அரசு வழங்கும் நிதியில் பற்றாக்குறை உள்ளது.
எனவே, பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணியில், கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில், சமூக பங்களிப்பு திட்ட நன்கொடையாளர்கள் மற்றும் அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை இணைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு பள்ளிகளை சேர்ந்த, 3,95,413 முன்னாள் மாணவர்களை, இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இதுவரை இணைத்துள்ளது.
'ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம், 25 முன்னாள் மாணவர்களையாவது சேர்க்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த பணிகளை வரும், 31ம் தேதிக்குள் முடிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment