
மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகளுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனா். ஈரோட்டில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகளுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.
தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகள் தோவு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 குடும்ப அட்டைதாரா்களில் சுமாா் 3.40 லட்சம் அட்டைதாரா்கள் விண்ணப்பம் பெற்றனா். இவா்களில், 2.25 லட்சம் போ மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனா்.
இந்நிலையில், தமிழகத்தில் 1.06 கோடி போ மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் தோவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் முதல்வா் அறிவித்திருந்தாா். இதையடுத்து, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் தோவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டது.
அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்க உள்ளாா். இதேபோல மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சா்கள் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கின்றனா்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளா் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் சு.முத்துசாமி மகளிா் உரிமைத் தொகையை வழங்குகிறாா். இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் மகளிா் உரிமைத் தொகை ரூ.1,000 வியாழக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது. திடீரென வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பாா்த்ததும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
No comments:
Post a Comment