அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற, பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்து உள்ளது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று, பணியாற்ற விரும்பினால், அவர்கள் வரும், 30ம் தேதி வரை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தகுதியானவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் நடத்தி, தேவையான பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.
No comments:
Post a Comment