Sunday, September 24, 2023

இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை செப்டம்பர் 25 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பாணை

குரூப் 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 673 ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு 27ம்தேதி சென்னையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News