Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 3, 2023

காலாவதியான எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு...!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு காப்பீட்டு நிறுவனம் என்றால், அது எல்.ஐ.சி தான்.

இதுமட்டுமல்லாமல் எல்.ஐ.சி இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த ஆண்டுடன் எல்.ஐ.சி தொடங்கி 67 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுக்குறித்து எல்.ஐ.சி வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நாட்டின் சேவையில் 67-வது ஆண்டை நிறைவு செய்வதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா முழுவதும் காப்பீடு மற்றும் சேமிப்பு கலாச்சாரத்தை வளர்த்து எடுப்பதில் எல்.ஐ.சி தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது

எல்.ஐ.சி தனது பாலிசிதாரர்களுக்காக காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்கும் சிறப்பு முகாமை கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனம், 2023-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.43,97,205 கோடி சொத்துகளை கொண்டுள்ளது.

2022-23 நிதியாண்டில் எல்.ஐ.சியின் முதலாம் ஆண்டு பிரீமியம் வருமானம் ரூ.2.31 கோடிகள் ஆகும். கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி 204.65 லட்சம் புதிய பாலிசிகளை வழங்கி உள்ளது.

கடந்த ஆண்டில் புதிய வணிக பிரீமிய வருவாயாக ரூ.1.73 கோடியை ஈட்டியதன் மூலம் நிறுவனத்தின் ஓய்வூதியம் மற்றும் குழுக்காப்பீட்டு பிரிவு கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி பிரீமிய வருவாயை தாண்டியுள்ளது.

காப்பீட்டு துறையில் மிகவும் நம்பகமான பிராண்ட் விருதை எல்.ஐ.சி பெற்றுள்ளது. மேலும் 2023-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் எல்.ஐ.சி நிறுவனம் 107-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பயணத்தில் உதவிய பாலிசிதாரர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News