UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் யுபிஎஸ்சி தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம்தோறும் 7,500 வீதம் பத்து மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
தமிழக மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அண்மையில் இந்த மதிப்பீட்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவு எண் உள்ளிட்ட ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment