Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 31, 2023

தலைமை ஆசிரியர்கள் 1,200 பேருக்கு சிக்கல்


அரசு உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும், 1,200 தலைமை ஆசிரியர்களை முதுநிலை ஆசிரியர் நிலைக்கு கொண்டு வர, பள்ளி கல்விக்கு அரசு அனுமதி அளித்துஉள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஆனால், பல பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தாமதமாகும் நிலையில், முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு பின், பழைய பணி மூப்பு அடிப்படையில், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வை மாற்றி பெறுகின்றனர். இதனால், ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் காத்திருப்போருக்கு பிரச்னை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பதவி உயர்வு செல்லாது என, நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, 1,200 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை மீண்டும் முதுநிலை ஆசிரியராக பழைய நிலைக்கு கொண்டு வர, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment