நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் சில ராசிகளுக்கு நற்பலன்களும் சில ராசிகளுக்கு சிரமங்களும் ஏற்படும்.
நவகிரகங்களில் சனி பகவானின் இடமாற்றமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது சனி பகவான் கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். வரும் நவம்பர் நான்காம் தேதி என்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
குருபகவான் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி மற்றும் குருவின் பின்னோக்கிய பயணத்தால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மகர ராசி
சனி மற்றும் குருவால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல பலன்களை உங்களுக்கு கிடைக்கும்.
மிதுன ராசி
குரு மற்றும் சனிபகவான்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
No comments:
Post a Comment