Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 19, 2023

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? அப்போ வெந்தயம் + இஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.

மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் உள்ளிட்ட காரணங்களால் பொடுகு பாதிப்பு ஏற்ப்பட்டு முடி உதிர்வு அதிகளவில் ஏற்படுகிறது.

அதேபோல் பொடுகு பாதிப்பால் தலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனாலும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் - 2 தேக்கரண்டி

*இஞ்சி - சிறு துண்டு

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். இதை முந்தின நாள் இரவு செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊற வைத்துள்ள வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு காய் துருவலை கொண்டு சாறு வரும் வரை துருவிக் கொள்ளவும்.

பின்னர் துறவி வைத்துள்ள இஞ்சியை ஒரு வடிகட்டியில் சேர்த்து சாறு வரும் வரை நன்கு பிழிந்து வெந்தய பேஸ்டில் சேர்த்து கொள்ளவும். பின்னர் இதை நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அப்ளை செய்து கொள்ளவும். 30 நிமிடம் வரை விட்டு பின்னர் சீகைக்காய் அல்லது அரப்பு பயன்படுத்தி கூந்தலை நன்கு அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.தலை முடி மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment