நமது IFHRMS மென்பொருளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நன்மையடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
1) ஐ.எப்.எச்.ஆர்.எம்.எசு மென்பொருளில் ஈ-சலான் மூலம் பணம் செலுத்தும் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நாம் ரிசர்வ் வங்கிக்கு நேரிடையாக பணம் செலுத்தமுடியும். இந்த முறையில் செலுத்தப்படும் பணம் உடனுக்குடன் அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
ஈ-சலானில் நாம் பணம் செலுத்தும் வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது அனைத்து வங்கிகள் என்ற விருப்பத்தை தெரிவு செய்து கொண்டு பணம் செலுத்தினால் மட்டும் போதும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாரத மாநில வங்கி, இந்தியன் ஓவர்சீசு வங்கி, இந்தியன் வங்கி போன்ற பிற வங்கிகள் வழியிலான பரிவர்த்தனையைக் காட்டிலும் அனைத்து வங்கிகள் என்ற தெரிவு மிக விரைவாகவும் துல்லியமாகவும் சேவையை நமக்கு வழங்குகிறது. பயன்படுத்தத் தொடங்குங்கள்.
2) இனி மேல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய இறுதித் தொகையை மிக விரைவாக காசாக்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 15.10.2023 முதல் பங்களிப்பு ஓய்வூதிய இறுதித் தொகை பெறுவதற்கான கருத்துருக்களை முன்னதாகவே ஐ.எப்.எச்.ஆர்.எம்.எசு மென்பொருளில் நாம் அனுப்புதல் வேண்டும். ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களில் இத்தொகையைப் பெற்று நம்மால் பயனடைய முடியும். டிசம்பர் 2023 வரை ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் ஆகிய இரு வழிகளிலும் கருத்துருக்கள் அனுப்பப்பட்ட வேண்டும்.
3) அலுவலக பணியாளர்களின் சம்பளப் பட்டியலில் சுய விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை தொடர்புடைய பணம் பெற்று வழங்கும் அலுவலரே சரி செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. செய்யப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் குறித்த பணியாளரின் ஈ-பணிப்பதிவேட்டிலும் புதுப்பிக்கப்பட்டுவிடும். விப்ரோவிடம் இனி டிக்கட் போடத் தேவையில்லை.
4)சம்பளப்பட்டியலில், திருத்தங்கள் மேற்கொள்ள மார்க் பார் ரீடிரை கொடுக்கும் நிகழ்வுகளில் குறித்த மாற்றங்களைப் பெற மாறிவிட்டதா மாறிவிட்டதா என பரிசோதிக்காமல் அன்றைய தினம் இரவு வரை கண்டிப்பாகக் காத்திருக்கவும். விப்ரோவிடம் டிக்கட் போட வேண்டிய அவசியம் இருக்காது.
5) பணிமாறுதலில் செல்லும் அலுவலரை விடுவிப்பதற்கு முன் மென்பொருளில் அவருடைய அடையாள எண்ணில் உள்ள அத்தனை பணிகளையும் புதியவருக்கு மாற்றிய பிறகே அவரை விடுவித்து அனுப்புங்கள். டிக்கட் போட்டு விப்ரோவிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.
6) சம்பளமில்லா பட்டிகளை பூர்வாங்க நட்வடிக்கைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பிறகு பட்டிகளை கருவூலத்திற்கு கொண்டு வரும் நாளிலேயே மென்பொருளிலும் கருவூலத்திற்கு அனுப்புங்கள். கருவூலத்தில் பெறப்படாத பட்டியல்களை மூன்றாவது நாளில் திருப்பி அனுப்ப அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.
* நன்றி. கருவூல அலுவலர், திருவாரூர்.
No comments:
Post a Comment