*விளாம்பழம் பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று. இதில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
* விளாம்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.
* விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இப்பழத்தை தினசரி ஒரு பழம் வீதம், வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டுவந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும்.
* பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்குதல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்தக் கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.
* விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகள் வலுவாகும்.
* தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சியை அளித்து, ரத்தத்தை சுத்திகரித்து விருத்தி செய்கிறது.
* விளாமரத்தின் பிசினை சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
* விளாம்பழம், நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும்.
* வாய்ப்புண், அல்சர் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணத்தைத் தரும்.
* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல் நிற்கும்.
* விளாமர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.
* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.
* பித்த வெடிப்பு, தோல் வறட்சி குணமாக விளாம்பழ இலைச்சாற்றை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
* விளாம்பழ மரத்தின் இலையை அரைத்து சாறு எடுத்து வியர்க்குருவில் தடவி வர, வியர்க்குரு மறையும்.
* விக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு இவற்றுக்கு விளாம்பழ இலைச்சாறை பாலில் கலந்து குடிக்க குணம் தரும்.
* விளாமர பிசினை உலர்த்திப் பொடி செய்து தினமும் தேனில் கலந்து சாப்பிட, வறட்டு இருமல், கபம், பித்தசுரம், நெஞ் செரிச்சல் குணமாகும்.
* பெண்களுக்கு மார்பக, கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கும். நல்ல வலி நிவாரணியாகவும் விளாம்பழம் செயல்படுகிறது.
No comments:
Post a Comment