தமிழகத்தைச் சோந்த பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவா்கள் 2023-2024- ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு, பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோந்த பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகள் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023- 2024- ஆம் கல்வி ஆண்டில் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரைஅணுகியோ அல்லது இணையதள முகவரியில் இருந்தோ விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2023-2024- ஆம் நிதி ஆண்டுக்கான புதிய, புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண் 044-28551462, மின்னஞ்சல் முகவரி: முகவரிக்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பா் 15 ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை ஜனவரி 15 ஆம் தேதிக்குள்ளும் அனுப்பிவைக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலக தொலைபேசி எண் 0422-2300404, மின்னஞ்சல் முகவரி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment