Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Thursday, October 12, 2023

டிரைவிங் லைசென்ஸில்.. திருத்தம் செய்யணுமா? உங்க போன் நம்பரை மாத்தணுமா? ஆன்லைனிலேயே வழியிருக்கு.

Add This Number In Your Whatsapp Groups -6379884356




ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்வதுபோலவே, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் இருந்தாலும் அதனையும் சரிசெய்ய முடியும்.

அதேபோல, லைசென்ஸில், போன் நம்பர் மாற்ற வேண்டுமானாலும், ஆன்லைனிலேயே இதற்கும் வசதி உண்டு.

டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.. டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், அல்லது லைசென்ஸை புதுப்பிக்க வேண்டுமானால், நேரடியாகவே அரசு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து பெற முடியும். ஆர்டிஓ தவிர, யாரெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும் தெரியுமா?

பயிற்சிகள்: வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி மையங்களை நடத்த அனுமதிக்கப்படும்... பயிற்சிக்கு பிறகு, இவை அனைத்துமே ஓட்டுநர் உரிமத்தை வழங்க முடியும். இருந்தாலும், இதற்காக, இந்த சட்ட நிறுவனங்கள் மத்திய மோட்டார் வாகனங்கள் (சிஎம்வி) விதிகள், 1989 -ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் தேவையான வசதிகளுடன் நிறுவனம் இருப்பது அவசியம்.

தற்போது, இந்த டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனிலேயே வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது.. டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்https://sarathi.parivahan.gov.in/sarathiservices/stateஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத் தேர்விற்குhttps://sarathi.parivahan.gov.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்கள்: ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்வது போலவே, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் ஏதாவது இருந்தாலும், செய்து கொள்ளலாம். இதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, ஆதார் அட்டை, 10 அல்லது 12 வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்டின் நகல், பிறப்புச் சான்றிதழ் போன்றவை தேவையாக இருக்கின்றன..

அதேபோல, ஒருவர், டிரைவிங் லைசென்ஸில் தங்களுடைய பெயரை மாற்ற விரும்பினால் அதற்கும் சில ஆவணங்கள் தேவைப்படும்.

குறிப்பாக, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டின் நகல், ஒரு தேசிய செய்தித்தாள் அல்லது செய்தித்தாளில் விளம்பரத்தின் நகல், முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்ட வாக்குமூலம் போன்றவை கண்டிப்பாக தேவைப்படும்.

வழிமுறைகள்: ஒருவேளை, டிரைவிங் லைசென்ஸில் செல்போன் நம்பர் மாறியிருந்தால் அதனையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்தான இவை

-https://parivahan.gov.inஎன்ற வெப்சைட்டிற்குள் சென்று, drivers/learners license என்ற பகுதிக்குள் நுழைய வேண்டும்

- இப்போது முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.

- பிறகு, Others என்ற பகுதியை கிளிக் செய்தால், Mobile Number Update என்ற பகுதி இருக்கும்.

- தரப்பட்டிருக்கும் 3 ஆப்ஷன்களில் உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

- பிறகு, "License Issue Date, Driving License Number, Date of Birth" போன்ற விவரங்களை பிழையில்லாமல் பதிவிட்டு, "Submit" என்பதை கொடுத்துவிட வேண்டும்

- இப்போது, உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்கள் ஸ்கிரீனில் தெரியும்.. அதை சரிபார்த்து, "Proceed" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- பின்னர், உங்களது செல்போனின் புதிய நம்பரையும், ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டு, "Proceed" ஆப்ஷனை தந்துவிட வேண்டும்.

- இப்போது புதிதாக மாற்றப்பட்ட செல்போன் நம்பருக்கு OTP வரும். அதை பதிவிட்டு "Verify" ஆப்ஷனை கிளிக் செய்தால், OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய செல்போன் நம்பர் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.





No comments:

Post a Comment

Popular Feed