Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 30, 2023

NLC Jobs; என்.எல்.சியில் 877 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரிபடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 877 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி தேதியாகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 877 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்களின் விவரம்

Fitter – 120

Turner – 45

Mechanic (Motor Vehicle) – 120

Electrician – 123

Wireman – 110

Mechanic (Diesel) – 20

Mechanic (Tractor) – 10

Carpenter – 10

Plumber – 10

Stenographer – 20

Welder – 108

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்; ரூ. 10,019

PASAA – 40

கல்வித் தகுதி: COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,766

Commerce - 24

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் வருடத்தில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Computer Science - 59

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் வருடத்தில் Bsc., Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Computer Application - 23

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் வருடத்தில் BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Business Administration - 28

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் வருடத்தில் BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Geology - 7

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் வருடத்தில் Bsc.,Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

வயது தகுதி: 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10.11.2023 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 15.11.2023 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி,

பொது மேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

என்.எல்.சி இந்தியா நிறுவனம்,

வட்டம்- 20, நெய்வேலி- 607803.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/LDC-net-Advt-2-24-10-23-1.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

No comments:

Post a Comment