Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 13, 2023

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. - 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு:

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் (நவ.14) மற்றும் 15ம் தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு:

ஆந்திராவில் நாளை. நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளாவில் நவ.15,16,17 மற்றும் அந்தமான், நிகோபாரில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 14ம் தேதி 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அதற்கு மறுநாள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனையொட்டி மத்திய கிழக்கு , தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment