Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 16, 2023

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அறிவிப்பு

Add This Number In Your Whatsapp Groups -6379884356
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா நிர்வாகப் பணியாளர்கல்லூரி இயக்குநர் அறிவித்துள் ளார்.இதுகுறித்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான தகுதித் தேர்வை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வுகளில் கிராமப்பகுதி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வசதியற்ற மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஆன்லைன் பயிற்சிவகுப்புகள் நடத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது. மேலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண் டும் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. விரும்புபவர்கள் தங்களிட முள்ள திறன் கைபேசி (ஸ்மார்ட் போன்) வாயிலாக ஆன்லைன் மூலம் இலவசமாகப் பாடங்களைக் கற்று தகுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தும்குரூப் 2, 2ஏ மற்றும் 1 பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் ஆன்லைன் வகுப்புகளாக நடைபெற்று வருகின்றன. இதைப் பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும் எளிய மாண வர்கள் பயனடைந்துள்ளனர்.

அந்த வகையில் குரூப்-4 பயிற்சிவகுப்புகள், 'AIM TN' வலைதள பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது.சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டும், பாடத் திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும், நெறிப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படும். ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு மாதிரி தேர்வு நடத்தி அதை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை களில் நேரலை மூலம் வினாத்தாள் குறித்த விவாதம் நடைபெறும். இதன்மூலம் மாணவர்கள் தவறுகளைக் களையவும் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளவும் இயலும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed