Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 17, 2023

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், 

“அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாள்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பு: பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தல் கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News