Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 19, 2023

உணவுக்கு பிறகு கொய்யா இலை டீ- சுகர் கண்ட்ரோலுக்கு இப்படி ஒரு வழி இருக்கு.........


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , உடல் எடையைக் குறைக்கவும் , முதுமையைத் தடுக்கவும் கொய்யாப்பழம் நல்லது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

கொய்யா இலை சாறு உலகின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த இலைகள் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் க்வெர்செடின் போன்ற ஃபிளாவனாய்டுகளின் சக்தியாக இருக்கின்றன.

கொய்யா இலை டீ எப்படி தயாரிப்பது?

நான்கு பெரிய கொய்யா இலைகளைக் கழுவவும் (ஒருவருக்கு பரிமாற)

ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் கொய்யா இலைகளை சேர்க்கவும்.ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.இலைகளை வடிகட்டி அரை எலுமிச்சை பழத்தை தண்ணீரில் பிழியவும்.

சுவைக்கு ஏற்ப சிறிது தேன் சேர்க்கவும்.நன்றாக கலக்கவும்.

ஆரோக்கியமான கொய்யா இலை தேநீர் ரெடி.

சுகர் கண்ட்ரோலுக்கு கொய்யா இலை

கொய்யா இலைச் சாறு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் மற்றும் நீண்ட கால ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுவதுடன், இன்சுலின் எதிர்ப்பை சரிசெய்யும் பண்புகளும் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

உணவுக்குப் பிறகு கொய்யா இலை தேநீர் அருந்துவது, குளுக்கோஸ் உறிஞ்சுதலைத் தணிப்பதன் மூலம் ரத்தச் சர்க்கரை அதிகமாவதை குறைக்கிறது.

செரிமானத்தின் போது கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றும் பல நொதிகளையும் கொய்யா இலைகள் தடுக்கின்றன, இது டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment