Tuesday, November 21, 2023

பைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த நடைபயிற்சி செய்து பாருங்க..!




இதை வெறும் 21 நாள்கள் தொடர்ந்தாலே நல்ல பலன்களை உணரலாம். இதை தினமும் காலை, மாலையில் ஒருமணிநேரம் செய்துவந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தால் சிவதிருப்பதையும் பார்க்கலாம்.

இதனால் முதுமை தள்ளிப்போடப்படும். நிறையப்பேருக்கு மார்பு சளி தொந்தரவு இருக்கும். 8 வடிவில் நடப்பதால் பிராண வாயு உள்ளே போய் சளித்தொல்லையை நீக்கும்.

தலைவலி, மலச்சிக்கலையும் எட்டுவடிவில் நடப்பது தீர்க்கும். சிலர் கண்பார்வைத்திறன் கொஞ்சம் குறைந்ததுமே கண்ணாடி போட்டிருப்பார்கல். இதை துவக்க நிலை கண் குறைபாடு எனலாம். அதுவும் இதில் போய்விடும். இதனால் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோயும் போகும். இதேபோல் மூட்டுவலி, பாதவெடிப்பு ஆகியவையும் போய்விடும்.

ஒபிசிட்டி, உடல் பருமன், இரத்த அழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, கண்நோய், சளித்தொல்லை, முதுகு மற்றும் மூட்டுவலி ஆகியவையும் போய்விடும். இதை குறைந்தது 21 நாள்கள் செய்தாலே இந்த மாற்றத்தை உணரலாம். இதுவரை எட்டுவடிவ நடைபயிற்சி செய்யாதவர்கள் இதை முயற்சித்துப் பாருங்களேன்..

வீட்டின் மொட்டைமாடி, தோட்டப் பகுதி, முன்புறம் போன்ற இடங்களில் இந்த எட்டு வடிவ வர்ம நடைப் பாதையை அமைத்துக் கொள்ளலாம். அடுக்குமடி குடியிருப்புகளில், சில குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான இடத்தில் இந்த நடைப்பாதையை அமைக்கலாம்.

எட்டு வடிவ நடைபாதையினால் உண்டாகும் நன்மைகள்!

எட்டு வடிவ நடைபாதையில் கூழாங்கற்கள் இருந்தால் நீங்கள் காலணிகள் இல்லாமல் பாதங்களை கூழாங்கற்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் படி வைத்து நடக்க வேண்டும்.

நடக்கும் போது பத்து நிமிடங்கள் வலமிருந்து இடமாகவும் பத்து நிமிடங்கள் இடமிருந்து வலமாகவும் நடக்க வேண்டும். இதுவே உடலில் நோய்கள் அண்டாமல் பார்த்துகொள்ளும்.

தொடர்ந்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளும் போது, உடல் எடையை அழகாக ஆரோக்கியமாக குறைக்கலாம். உடலில் செரிமான உறுப்புகளின் செயல்திறன் அதிகரிக்கலாம். சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க இந்த எட்டு வடிவ நடைபயிற்சி உதவும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும்.

உடலில் ஏற்படக்கூடிய சோர்வை நீக்குவதோடு, மனதில் ஏற்படக்கூடிய சோர்வையும் நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வாத நோய்களுக்கான முதன்மையான எதிரி இந்த எட்டு வடிவ வர்ம நடைப்பாதை! கூழாங் கற்கள் பொருத்திய நடைப்பாதையில் தினமும் நடந்த முதியவர்களின் இரத்த அழுத்தம் ஓரளவு குறைந்ததாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனினும் இது குறித்து இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை.

குதிகால் வலி, இடுப்பு வலி, உயர் இரத்த அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் இந்த எட்டு வடிவ நடைபாதையில் நடக்க அறிவுறுத்துவதுண்டு.

இந்த எட்டு வடிவ நடைபாதையை சரியாக அமைக்க வேண்டும். இதன் அமைப்பில் குறிப்பாக நீளத்தில் ஆறு அடிக்கும் கீழ் சுருக்கினால், சிறிய வட்டப்பாதையில் நடக்கும் நிலையால் தலைசுற்றல் ஏற்படும். மித வேகத்தில் நடப்பதே சிறப்பது. வேகமாக நடப்பது கூடாது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News