ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் காணொளி வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தின் வாயிலாக 25.11.2023 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் நடைபெற இருந்த மாபெரும் மறியல் போராட்டத்தை 9.12. 2023 சனிக்கிழமைக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எப் பணியை அரசு வழங்கினாலும் புறந்தள்ளிவிட்டு பேரெழுச்சியோடு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறக்கூடிய மாபெரும் மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோவில் இணைந்திருக்கின்ற அனைத்து சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறையை நிரப்பி கோரிக்கையை வென்றெடுப்பது என இன்றைய கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது.
ஆகவே திட்டமிட்டபடி 9.12.2023 சனிக்கிழமை அன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment