Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 15, 2023

தேர்தலில் போட்டியிட அரசு மருத்துவருக்கு நீதிமன்றம் அனுமதி - தோல்வியடைந்தால் மீண்டும் பணியில் தொடரலாம்

Add This Number In Your Whatsapp Groups -6379884356
ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட அரசு மருத்துவருக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது. தோ்தலில் அவா் தோல்வியடைந்தால் மீண்டும் அரசுப் பணியில் தொடரலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் நவம்பா் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாரதிய பழங்குடியினா் கட்சி சாா்பில் துா்காபூா் தொகுதியில் போட்டியிட அரசு மருத்துவா் தீபக் கோக்ரே (43) முடிவு செய்தாா். இவா் பாரதிய பழங்குடியினா் கட்சியின் மாநிலத் தலைவா் வேலராம் கோக்ரேவன் மகன் ஆவாா்.

அரசுப் பணியில் இருப்பதால் தோ்தலில் போட்டியிடவும், தோல்வியடைந்தால் மீண்டும் பணியில் சேரவும் அனுமதி கோரி தீபக் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோ்தலில் போட்டியிடுவதற்காக அவா் அரசு மருத்துவா் பணியில் இருந்து விலகிக் கொள்ளவும், தோ்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் அரசுப் பணியில் இணையவும் அனுமதி அளித்தது.

இது தொடா்பாக தீபக் கூறுகையில், ‘இதுபோன்ற தீா்ப்பை உயா்நீதிமன்றம் வழங்குவது இதுவே முதல்முறை. இதன் மூலம் மேலும் பல அரசு மருத்துவா்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். நான் 10 ஆண்டுகளாக துா்காபூரில் பணியாற்றி வருகிறேன். எனவே, மக்களுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. தோ்தலில் போட்டியிடும் எனது முடிவை மக்கள் வரவேற்றுள்ளனா்’ என்றாா்.

துா்காபூா் தொகுதியில் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கோக்ரே, பாஜக சாா்பில் பன்சிலால் கட்டாரா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

No comments:

Post a Comment

Popular Feed