Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 6, 2023

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை கெளரவித்தது தமிழக அரசு


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மஞ்சுளா அவர்கள் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.

உடனடியாக பெருந்துறை சேனிடோரியம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு இதயத்தை கே ஜி மருத்துவமனைக்கும், கண் விழிகள் அரசன் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.


அதன் பிறகு இவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக பள்ளிபாளையம் ஆத்மாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., திருச்செங்கோடு கோட்டாட்சியர் (RDO), தலைமையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது..

No comments:

Post a Comment