Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 4, 2023

அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்; கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?

அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வினியோகிப்பதாக, கர்நாடகா முதல்வர் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, தமிழகமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உருவான, நவம்பர் 1ம் தேதி, 'கர்நாடக ராஜ்யோத்சவா' தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கோரிக்கை

கர்நாடகா என பெயர் மாற்றி, 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, பல்வேறு திட்டங்கள் விழாவில் அறிவிக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக, அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வினியோகிப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இந்த அறிவிப்பு, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசுபள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டுமென, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

வலியுறுத்தல்

இந்நிலையில், கர்நாடகா மாநில அரசின் அறிவிப்பை, தமிழகமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறுகையில், ''தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு மின்கட்டணத்திற்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் இத்தொகை போதுமானதாக இல்லை என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

''அரசு பள்ளி மாண வர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவது போல, மின்கட்டண தொகையையும், மின் வாரி யத்திற்கே நேரடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment