Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 26, 2023

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 400 காலியிடங்கள்

2024ம் ஆண்டுக்கான தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (I) தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதில் தேர்வானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் (எஸ்.எஸ்.பி) நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறலாம். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 2025 ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கவுள்ள 115-வது கடற்படை பயிற்சி வகுப்பு மற்றும் 153-வது தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 400

தேசிய பாதுகாப்பு அகாடமி

ராணுவம் - 208 (மகளிர் 10)

கடற்படை - 42 (மகளிர் 12)

விமான படை -120 (மகளிர் - 06)

கடற்படை அகாடமி

இந்திய கடற்படை அகாடமி - 30 (மகளிர் - 09)

யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 2005 ஜுலை 2ம் தேதிக்கு பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2008, ஜுலை 1ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி: 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் கடற்படை, விமான படை பதவிக்கும், கடற்படை அகாடமி பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்: அறிவிக்கை வெளியான நாள்: 20.12.2023 ;

விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 09.01.2024;

விண்ணப்பம் செய்வது எப்படி:

விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.

இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தெளிவுரை வேண்டுவோர்: மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி 'சி' நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment