சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 25ம் தேதி (27.01.2024) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இளநிலை உதவியாளர்: காலியிட எண்ணிக்கை 1 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை: ரூ. 15,900 முதல் 50,400 வரை ஆகும்.
ஓட்டுநர்: காலியிட எண்ணிக்கை 1 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியமைக்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். சம்பள நிலை: ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.
நூலகர் : காலியிட எண்ணிக்கை 1 ஆகும் . இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருத்தல் வேண்டும். சம்பள நிலை: ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.
உதவி மின் பணியாளர்: காலியிட எண்ணிக்கை 1 ஆகும் இப்பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை: ரூ. 16,600 முதல் 52,400 வரை ஆகும்.
: மத்திய அரசில் 444 பணியிடங்கள்...டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே... தேர்வில் சொல்லி அடிக்கலாம்..!
இதர நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 19- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை- 4 ஆகும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
No comments:
Post a Comment