அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரப்பினா் இனத்தைச் சோந்த மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இனத்தைச் சோந்த மாணவிகள் பயன்பெறலாம்.
பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவிகள் பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி ஆதாா் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அரசு பள்ளித் தலைமையாசிரியா்கள் மாணவிகளின் விவரங்களை எமிஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
No comments:
Post a Comment