Join THAMIZHKADAL WhatsApp Groups
அரையாண்டு தேர்வுக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்த மாணவர்கள், திடீரென தேதி மாற்றப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.பள்ளிக்கல்வித்துறை, டிச., 7 மற்றும் 8 ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்தப்பட்டது.தொடர்ந்து, அரையாண்டுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், நேற்றுமுன்தினம், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வுகளை, 14 மற்றும் 20ம் தேதிகளில் மாற்றி, மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், தேர்வுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
No comments:
Post a Comment