பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு centralbankofindia.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் சிபிஐ வங்கி இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ந்தியாவின் முதல் "சுதேசி" வங்கியாக இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பகுதிகளில் 4650-க்கும் மேற்ப்பட்ட கிளைகளையும் 4 விரிவுபடுத்தும் மையங்களையும் மற்றும் 4800 க்கும் மேற்பட்ட தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) கொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த பெருமைமிகு சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் தான் தற்போது துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கு துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் மொத்தம் 484 இடங்கள் காலியாக உள்ளன.
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது.
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.3.2023 அடிப்படையில் 18 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 175 செலுத்தினாலே போதுமானது.
கடைசிநாள்:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 9-ம் தேதி (9.1.2024) கடைசி நாளாகும்.
இணையதள முகவரி:
துப்புரவு, துணை உதவியாளர் பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறியcentralbankofindia.co.inஎன்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment