முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை உயர்கல்வித்துறை தேர்வு செய்யும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்துக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 17ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 2311 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய நபர்கள் மேற்கண்ட இணையதளத்தில் சென்று தங்களுக்கான முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தில் மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை உயர்கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment