Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 30, 2023

முக்கியத்துவம் இழக்கிறதா பள்ளி மேலாண்மை குழு?

பள்ளி மேலாண்மை குழு, மாதந்தோறும் கூட்டம் நடத்திய நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பள்ளி செயல்பாடுகளை விவாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் உள்ளடக்கிய பள்ளி மேலாண்மை குழு உருவாக்கி, அதன் பணிகள், அதிகாரம் வரையறுக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய, பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி, பள்ளி மேலாண்மை குழு, வங்கி கணக்கு எண்ணில் மட்டுமே செலுத்தப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டில் சிங்கிள் நோடல் ஏஜன்சி (எஸ்.என்.ஏ.,) எனும், வங்கி பண பரிமாற்ற திட்டம் வாயிலாக பள்ளிகளுக்கு நிதி பகிரப்பட்டுள்ளது. இதில், நிதிபரிமாற்றங்கள் முழுக்க, ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஒப்புதல் அளிக்க தேவையில்லை.

திட்டப்பணிகளுக்கான ரசீது இணைத்து விண்ணப்பித்தால், உரிய நிறுவனத்தின் வங்கி கணக்கு எண்ணுக்கு, தொகை பகிரப்படுகிறது. மேலும், மாதந்தோறும் நடத்தி வந்த பள்ளி மேலாண்மை கூட்டம், தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடினால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி கூறுகையில்,''பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோரும் இடம்பெற்றுள்ளதால், மாதந்தோறும் பள்ளி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டன. ஆனால் தற்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடினால், சம்பிரதாயத்திற்கான கூட்டமாக மாறிவிடும். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மகேஷ், செயலாளர் குமரகுருபரன் ஆகியோருக்கு 1,000 மனுக்கள் வரை அனுப்பியிருக்கிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment